Chennai DCPU Recruitment 2025
Chennai DCPU Recruitment 2025

12வது படித்தவர்களுக்கு தேர்வில்லா அரசு வேலை! கட்டணம் இல்லை – நேர்காணல் மட்டும்! Chennai DCPU Recruitment 2025

Chennai DCPU Recruitment 2025: சென்னையில் வசிக்கும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு இப்பொது ஒரு அருமையான வேலைவாய்ப்பு செய்தி! சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) காலியாக உள்ள “உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்” (Assistant-cum-Data Entry Operator) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Chennai DCPU Recruitment 2025
Chennai DCPU Recruitment 2025

இந்த வேலைவாய்ப்பின் மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், இதற்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது, விண்ணப்பக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 24, 2025. இந்த வாய்ப்பு குறித்த முழுமையான விவரங்களை இப்போது பார்க்கலாம்.

முக்கிய விவரங்கள்

  • துறை: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (DCPU), சென்னை
  • பதவி: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்
  • காலியிடம்: 01
  • பணியிடம்: சென்னை
  • சம்பளம்: மாதம் ரூ.11,916/-
  • கடைசி தேதி: 24.10.2025

தேவையான தகுதிகள்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடம் கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்:

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில்நுட்பத் தகுதி:
    1. தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை (Senior Grade) தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் அவசியம்.
    2. கணினி பயன்பாட்டில் சான்றிதழ் படிப்பு (Certificate Course in Computer) முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர், அவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் காட்டும் திறமையின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார். இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணிக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாது.

  1. முதலில், சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in/ என்பதில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
  3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 13, சாமி பிள்ளைத் தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை – 600112.

சென்னையில் அரசு சார்ந்த வேலையில் சேர விரும்பும் தகுதியான நபர்கள், கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *