TN Rain Holiday Today
TN Rain Holiday Today

கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? செக் பண்ணுங்க! TN Rain Holiday Today

TN Rain Holiday Today: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 22, 2025, புதன்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிகரித்துள்ளது.

TN Rain Holiday Today
TN Rain Holiday Today

சென்னை வானிலை ஆய்வு மையம் பல மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால், விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

விடுமுறை அறிவிக்கப்பட்ட பகுதிகள் (இதுவரை)

கிடைத்துள்ள தகவல்களின்படி, கனமழை எச்சரிக்கை காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது:

தமிழ்நாட்டில் இதுவரை திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை அந்தந்தப் பகுதி நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.

இன்று (அக். 22) கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் நாளைக்கு விடுத்துள்ள எச்சரிக்கைகள்:

  • ரெட் அலர்ட் (அதி கனமழை): செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (மற்றும் புதுச்சேரி).
  • ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர்.

மற்ற மாவட்டங்களின் நிலை என்ன? சென்னைக்கு விடுமுறையா?

தற்போதைய நிலவரப்படி ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கனமழையின் தீவிரம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்து அறிவிப்பார்கள். எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், உங்கள் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும். உள்ளூர் தொலைக்காட்சி செய்திகள், மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதளப் பக்கங்கள் ஆகியவற்றைக் கவனித்து வருவது நல்லது.

TN Rain Holiday Today
TN Rain Holiday Today

இன்று விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருங்கள், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள்.

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *